நவம்பர் 24ல் வருகிறது பென்ஸ் AMG GT S



















உலக நாடுகளில் இவ்வருடம் முதல் விற்பனையில் இருக்கும்  AMG GT S மாடலை, இந்தியாவில் நவம்பர் 24ம் தேதி வெளியிடுகிறது மெர்சிடீஸ் பென்ஸ். ஜெர்மனியைச் சேர்ந்த AMG நிறுவனம், 2வது முறையாக, இந்த காரை தயாரிப்பதில் பென்ஸுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறது. காரில் பொருத்தப்பட்டிருக்கும் இரட்டை டர்போ சார்ஜர்களைக் கொண்ட புதிய 4.0 லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜின், 503bhp பவரையும், 65kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் இரட்டை கிளட்ச் வசதியுடன் கூடிய 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. 100கி.மீ வேகத்தை, 3.7 விநாடிகளில் எட்டும் இந்த காரின் அதிகபட்ச வேகம் 310கிமீ. மேலும் 1/4 மைல் தூரத்தை 11.2 விநாடிகளில் அடையும் அளவிற்கு காரின் பெர்ஃபாமென்ஸ், 5 மோடுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது பென்ஸ்.பழைய SLS AMG காருடன் ஒப்பிடும்போது, GULL - WING கதவுகளுக்கு பதிலாக , எடைக் குறைப்புக்காக வழக்கமான கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.  தவிர காரின் கட்டுமானத்தில் 90 சதவிகிதம் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், எடைக்குறைப்பை உறுதி செய்து, காரின் செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவை உயர்ந்துள்ளன. காரின் டெயில்கேட், மேல் நோக்கி திறக்கும் வகையில் இருப்பதால், தினசரி பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்கிறது பென்ஸ். 8 கலர்களில் கிடைக்கும் இந்த கார், CBUஆக இறக்குமதி செய்யப்படுவதால், காரின் விலை 2 முதல் 2.5 கோடி ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென்ஸ்  AMG GT S காருக்கு போட்டியாக, ஆடி R8 V10, ஃபோர்ஷே 911 GT3, ஜாகுவார் எஃப் டைப் ஆகிய கார்கள் இருக்கும். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad