2018–ல் வெளியாகும் எந்திரன் 2
ரஜினி நடித்த எந்திரன் படம் நவீன தொழில்நுட்பத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து எந்திரன் 2–ம் பாகத்தை எடுக்க டைரக்டர் சங்கர் முடிவு செய்தார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். எந்திரன்–2 படத்துக்கான ரஜினி ஸ்டில்களும் வெளியாகியுள்ளன. ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார். கபாலி படம் முடிவடைந்ததும் அவர் எந்திரன்–2 படத்தில் நடிக்கிறார். எனவே எந்திரன் படப்பிடிப்பு 2016–ம் ஆண்டு தொடங்குகிறது. இதையடுத்து எந்திரன்–2 படப்பிடிப்புக்கான தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் டைரக்டர் ஷங்கர் மிகவும் மும்முரமாக உள்ளார். இதற்கிடையே பாகுபலி 2–ம் பாகமும் விரைவில் தயாராக உள்ளது. அதற்கான தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. எந்திரன் 2 படத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தேசிய விருது பெற்ற நவீன தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விரைவில் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள். 2016–ம் ஆண்டு எந்திரன் 2 படப்பிடிப்பை தொடங்கினால் படம் முடிவடைய 2 ஆண்டுகள் ஆகும். அதில் அதிக தொழில்நுட்பங்கள் இடம்பெறுவதால் படம் முடிய 2 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே 2018–ம் ஆண்டு எந்திரன் 2 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.