சென்னை, ராஜஸ்தானுக்கு 2 ஆண்டுகள் தடை! புதிய ஐபிஎல் அணியில் தோனி , ரெய்னா உட்பட 10 வீரர்கள் நேரடி தேர்வு
ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் உருவாக்கப்படுகிறது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2016, 2017ம் ஆண்டு சீசனில் இந்த இரு அணிகள் பங்கேற்க முடியாது. இந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த புதிய அணிகள் விரைவில் தேர்வு செய்யப்படுகிறது. இந்த அணிகள் கிட்டத்தட்ட ராஜஸ்தான், சென்னை அணிகள் போன்றே இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் 2 புதிய அணிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 5 பேரில் அதிகபட்சமாக 4 இந்திய வீரர்கள் இருக்கலாம். மற்ற வீரர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள். இதன் படி புதிய ஐபிஎல் அணியில் சென்னை அணியில் இருந்து முன்னணி வீரர்களான தோனி , ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், மெக்குல்லம் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இந்த புதிய அணிகளின் விவரம் எதிர்வரும் 9ம் தேதி மும்பையில் நடக்கும் கிரிக்கெட் வாரிய கூட்டத்திற்கு பிறகே தெரியவரும்.