இனிமேல் டிக்கெட்டுக்கு 120 ரூபாய் செலவு செய்யத் தேவையில்லை
ஒரு நல்ல படம் நல்ல திரையரங்குகளில் பார்க்கவேண்டுமாயின் 100 முதல் 120 வரை பணம் கொடுத்தால் மட்டுமே சரவுண்டிங் இசை,சரியான உயரத்தில் சீட்டுகள் என வசதியாகப் பார்க்க முடியும். இன்னும் பல குடும்பங்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள், விசில் , சத்தங்கள் போன்ற இடையூறுகள் இல்லாமல் படம் பார்க்க வேண்டுமாயின் கண்டிப்பாக மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளையே தேர்வு செய்தாக வேண்டும். இந்நிலையில் இனி மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் படம் பார்ப்போருக்கு சந்தோஷமான செய்தியாக, அரசின் வரிச்சலுகை பெறுகிற சினிமாக்களுக்கு 120 ரூபாய் கொடுக்கத் தேவையில்லை எனவும், 85 ரூபாய் செலவு செய்தால் போதுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இதுகுறித்து, சென்னையின் பிரபல மல்டிப்ளக்ஸ் மேலாளர், மற்றும் செய்தித்தொடர்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அரசு உத்தரவு எனில் அதை மீற முடியாதுதான். எனினும் எங்களுடைய சில திரையரங்குகள் மால்களில் வாடகையில் இருக்கிறது. அதனால் ரூ 120 என்பதே எங்களுக்குக் கொஞ்சம் கட்டுப்படியாகாத நிலைதான். இதில் சில சினிமாக்கள் சரியாகப் போகவில்லை எனில் மற்ற ஏரியா திரைகள் போல் எங்களால் ஏசிகளை அணைக்கவோ, அல்லது இதர விஷயங்களை மேற்கொள்ளவோ முடியாது. ஏனெனில் தரம் என்ற ஒன்றை கடைபிடித்தாக வேண்டும். இதுகுறித்து சில மல்டிப்ளக்ஸ்கள் மேல் முறையீடு செய்யலாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் நாங்களும் உள்ளூர் வாசிகள், எங்களுக்கும் பொதுவான பொறுப்புகள் இருக்கின்றன. என்பதால் இந்தத் தீர்ப்புக்கு ஒத்துழைப்போம் எனக் கூறுகின்றனர்.