மீண்டும் சர்ச்சையில் ஹர்பஜன் சிங்: 113 வகை பாக்குகளை பரிமாறியதாக குற்றச்சாட்டு!
திருமண விழாவில் 113 வகையான பாக்குகளை விருந்தினர்களுக்கு பரிமாறிய குற்றத்திற்காக ஹர்பஜன் சிங் மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் திருமணம் கடந்த ஒரு வார காலமாக ஜலந்தரில் களை கட்டி வருகிறது. ஏற்கனவே அவரது திருமண நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்களை பாதுகாவலர்கள் சிலர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஹர்பஜன் செய்தியாளர்களிடம் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், புனித நிகழ்வுகளின் போது, பாக்கு வகைகள் பரிமாறப்படக் கூடாது என்றும் மேலும் திருமண விழாவில் 113 வகையான பாக்குகளை பரிமாறியது குற்றமாகும் என சீக்கிய அமைப்பு ஒன்று, சீக்கிய மதத்தின் உயரிய குழுவான அகால் தக்த்திடம் புகார் அளித்துள்ளது.