கெட்ட பெயரைச் சரி செய்ய காமெடிபடத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்
நான் ஈ பட நாயகன் நானி, லாவண்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த பலே பலே மகாடிவோய் படத்தை தமிழில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்திருக்கிறது.எதையும் மறந்துவிடும் அம்னீசியா வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பார் நானி. அதனால் அவரது காதலில் ஏற்படும் சிக்கலும், பின்னர் எப்படி தப்பித்தார் என்பதைச் சொல்லியிருக்கும் படமே பலே பலே மகாடிவோய்.
முழுக்க முழுக்க காமெடியில் கலக்கிய இப்படத்தை, கோபி சுந்தர் இசையமைக்க, மாருதி தாசரி இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியில் பெரும் ஹிட் அடித்தது. இப்படத்தின் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நடித்தால் நன்றாக இருக்குமென்று அவரிடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம்.
தற்பொழுது “ப்ரூஸ்லீ” படப்பிடிப்பில் ஜி.வி.பிரகாஷ் பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து “கெட்ட பயடா இந்த கார்த்தி” படத்திலும் நடிக்கவிருக்கிறார். இவ்விரு படங்களும் முடிந்த பின்னரே இப்படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.