நான் ஏன் அவர்கள் போல் இல்லை என்று சூர்யா வருந்துகிறார்
சூர்யா தற்போது ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பசங்க-2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.இதில் பேசிய சூர்யா ‘இந்த படம் என் வாழ்வில் மிகவும் ஸ்பெஷலான படம், 36 வ யதினிலே படத்திற்கு பிறகு நான் தயாரிக்கும் ஒரு படம்.இப்படத்தில் பாண்டிராஜ் என்னை இயக்கும் போது நான் ஏன் நாகேஷ், ஜிம்கேரி, ராபின் வில்லியம்ஸ் போல் இல்லை என தோன்றியது, அந்த அளவிற்கு அவர் என்னிடம் குறும்புத்தனமான நடிப்பை எதிர்ப்பார்த்தார்’ என கூறினார்.