பிரபல இயக்குனரின் நடிப்பை கண்டு அசந்து போன விஜய்
இளைய தளபதி விஜய் தனக்கு ஒருவரின் நடிப்பு பிடித்தால் உடனே மனம் திறந்து பாராட்டுவார். இதில் பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற வேறுபாடே இல்லை.இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் படத்தில் வில்லனாக பிரபல இயக்குனர் மகேந்திரன் நடித்து வருகிறார்.சமீபத்தில் விஜய் மற்றும் மகேந்திரன் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்துள்ளனர். இதில் மகேந்திரனின் நடிப்பை கண்டு அசந்து போய் விட்டாராம் விஜய். மேலும், கண்டிப்பாக அடுத்த வருடம் சிறந்த வில்லன் விருது உங்களுக்கு தான் சார் என கூறினாராம்