காதலால் காயப்பட்டு கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜாகீர் கான்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். அதே சமயம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் உடல் தகுதியின்மை, காயம் போன்றவற்றால் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையிலே தற்போது ஓய்வும் அறிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியாததற்கு உடல் தகுதியின்மை, காயம் மட்டும் காரணமில்லை. அதற்கு அவரின் காதல் லீலைகளும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஜாகீர் கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்தி நடிகை இஷா ஷ்ராவனியை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு ஏற்கனவே இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டனர். அவர் 2005ம் ஆண்டுதான் முதன்முதலில் இஷாவை சந்தித்தார். அப்போதே இருவரும் காதலில் விழுந்து விட்டனர். இந்தக் காதலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். இந்த நிலையில் நடிகை கைகூகார் கானின் வருகையால் இடையில் அவர்களுக்குள் பிரிவும் ஏற்பட்டது. 2 ஆண்டுகள் பேசிக் கொள்ளாமலேயே இருந்தனர். பின்னர் மறுபடியும் இருவரும் இணைந்தனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே முன்பை விட காதல் வலுவானது. இந்நிலையில் இஷாவை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜாகீர் கானின் வீட்டில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் உலகக்கோப்பை வென்ற பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று ஜாகீர் தனது வீட்டில் கூறியிருந்தார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்ற பிறகு இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அவர் மறுத்திருந்தார். யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் அவர் மொடல் அழகி ராமொனாவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஒரு ஷாப்பில் மாலில் இருவரும் கையோர்த்து நடந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இது போன்ற ஜாகீர் கானின் காதல் லீலைகள் தான் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.