த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தினர் பார்க்கவில்லை.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் ஏ சர்டிபிகேட் வாங்கினாலும் வாங்கியது ஜி.வி.பிரகாஷை எல்லாரும் பிட்டுப் பட நாயகன் என்னும் அளவிற்கு சொல்லத் துவங்கியுள்ளனர். மிகவும் கவர்ச்சியான காட்சிகளுடன் இளசுகளுக்கான படமாக வெளியானது. இப்படத்தில் நடித்தால் உங்கள் இமேஜ் மாறி விடுமே என நீங்கள் நினைக்கவில்லையா, என ஜிவி.பிரகாஷிடம் கேட்கப்பட்ட சமீபத்திய கேள்விக்கு அவர் அளித்த பதில். கண்டிப்பாக இல்லை. இந்தப் படம் இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட படம். இது குடும்பப் படமல்ல. எங்களுக்கான ஆடியன்ஸ் யார் என்பதிலும் நாங்கள் தெளிவாக இருந்தோம். எனது இமேஜ் பாதிக்கப்படப்போவதும் இல்லை. காரணம் நான் தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடிக்கப் போவதில்லை. அடுத்தடுத்து கலவையான படங்களில் நடித்து வருகிறேன். புரூஸ்லீ குழந்தைகளுக்கான பொழுதுபோக்குப் படம். கெட்டப் பையன்டா கார்த்தி படம் காதல் ரொமாண்டிக் படம் எனினும் ‘யு’ படம் தான். சில படங்கள் எதிர்விதமான அலைகளை ஏற்படுத்துவது இயல்பு. துள்ளுவதோ இளமை வந்த புதிதில் எதிரான கருத்துகளே கிடைத்தன. ஆனால் அந்தப் படம் சென்சேஷனல் படமாக அமையவில்லையா?. அதே போல் தான் நாங்கள் இந்தப் படத்தை ஆரம்பம் முதலே யாருக்கான படம் என்பதில் துவங்கி எந்தவித மறைமுக விளம்பரமும் இல்லாமல், சரியாக இளைஞர்களை மட்டுமே குறி வைத்து விளம்பரப் படுத்தினோம் என்றார். உங்கள் குடும்பம் மற்றும் மனைவி இந்தப் படத்தைப் பார்த்தார்களா என்ற கேள்விக்கு, நான் அவர்களை பார்க்க விடவில்லை என கூறியுள்ளார். உங்களை அடுத்த சிவகார்த்திகேயன் என அழைப்பது குறித்து, அது நல்ல விஷயம் தான். எனினும் எதையும் நான் பொருட்படுத்தமாட்டேன். சினிமா ஒரு வியாபாரம். என் மேல் நம்பிக்கையுடன் பணம் போடும் போது அதை லாபமாக்கித் தரவேண்டியதுதான் என் வேலை எனக் கூறியுள்ளார்.