தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக சதம் அடித்த கோஹ்லி






இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள்  வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை வகிக்கிறது.  இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள்  எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோஹ்லி 140 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 138 ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார்.  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கோஹ்லி அடிக்கும் முதல் சதம் ஆகும். மேலும் ரெய்னா 53, ரகானே 45 ரன்களும்  எடுத்து ஆட்டமிழந்தனர்.  தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சில் ரபடா, ஸ்டெயின் தலா 3 வீக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள்  மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 3, ஹர்பஜன் 2, மோகித்சர்மா, அக்சர் பட்டேல், மிஸ்ரா தலா ஒரு விக்கெட் விழ்த்தினர்.  இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது போட்டி வரும் 25-ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.  ஆட்ட நாயகன் விருது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad