சுந்தர் சி. தயாரிப்பில் மிரட்ட வருகிறது 'ஹலோ நான் பேய் பேசுறேன்
சென்னை: அரண்மனை 2 வைத் தொடர்ந்து அடுத்ததாக ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படத்தை, சுந்தர்.சி தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரண்மனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பேய்களை ஆரம்பித்து வைத்த சுந்தர்.சி அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை 2 படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார். த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா மற்றும் சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திற்கு அரண்மனை 2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு பேய்ப் படத்தை தயாரிக்கவிருக்கிறார் சுந்தர்.சி.