இந்திய பந்துவீச்சாளர்களில் சிறந்தவர் யார்?
இந்திய பந்துவீச்சாளர்களில் யார் சிறந்தவர் என்பது குறித்து கிரேம் ஸ்மித் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும், தலைசிறந்த அணித்தலைவராகவும் திகழ்ந்தவர் கிரேம் ஸ்மித். இவர் இந்தியாவிற்கு எதிராக விளையாடியபோது 25 முறை ஜாகீர்கான் பந்தை எதிர்கொண்டுள்ளார். இதில் 13 முறை ஆட்டமிழந்துள்ளார், சமீபத்தில் ஜாகீர்கான் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஜாகீர்கான் குறித்து ஸ்மித் கூறுகையில்இ நான் சந்தித்த இந்திய பந்து வீச்சாளர்களில் ஜாகீர்கான்தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஸ்மித் 117 டெஸ்ட் மற்றும் 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 27 சதத்துடன் 9265 ரன்களும் , ஒரு நாள் போட்டிகளில் 10 சதங்களுடன் 6989 ரன்களும் குவித்துள்ளார்.