அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு!!
அரசு தொழிற்பயிற்சி
நிலையத்தில் வேலைவாய்ப்பு
செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி
நிலையத்தில், காலியாக
உள்ள பணிமனை, பண்டக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட
நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்
கீழ், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி
வருகிறது. இங்கு 3 பணிமனை உதவியாளர், 1 பண்டக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பத்துடன், கல்வி, ஜாதி, அனுபவம் போன்ற
சான்றிதழ்களின் நகல்களை, வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 10-ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள்
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி அலுவலர், செங்கல்பட்டு என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.