ஜெயம் ரவியிடம் தோற்று போன விஜய், அஜித்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் விரல் விட்டு எண்ணி விடலாம் ஹிட் படங்களை. அந்த வகையில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்த படங்கள் என்றால் எண்ணிக்கை இன்னும் குறையும்.இந்நிலையில் விஜய்யின் புலி, அஜித்தின் என்னை அறிந்தால் ஆகியவை எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை. தனுஷின் மாரி, அனேகன், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை என பல படங்களுக்கு இதுதான் நிலைமை.இந்த வருடத்தில் உண்மையாகவே எல்லா தரப்பினருக்கும் அதிக லாபம் கொடுத்த படம் தனி ஒருவன் தானாம். இப்படம் கிட்டத்தட்ட ரூ 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜுலியட் படமும் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, இந்த வருடத்தில் வசூல் நாயகன் தற்போது வரை ஜெயம் ரவி தானாம்