புலி படம் குறித்து முருகதாஸ் சொன்ன ஒற்றை பதில்!
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, தம்பிராமையா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் புலி. பெரிய நடிகர்கள் படமெனில் ரசிகர்கள் போட்டிபோட்டுகொண்டு முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது வழக்கம். அதுவும் விஜய் என்றால் சொல்லவா வேண்டும் அப்படித்தான் நேற்று இரவு வரை முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. எனினும் படம் சில சிக்கல்களால் முதல் காட்சிகள் ரத்தாகின. மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு பேருந்துகளின் கண்ணாடிகளை சேதப்படுத்திய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் ட்விட்டர் பக்கத்தில் புலி ரிலீஸ் குறித்து கேள்விகளை எழுப்ப அதற்கு ஒற்றை வரியில் துப்பாக்கி படத்தில் விஜய் சொல்லும் ஐயம் வெயிட்டிங் பாணியில் வெயிட்டிங் ஃபார் புலி என பதிலளித்துள்ளார் முருகதாஸ். அவர் மட்டுமல்ல விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தப்படி புலி படமும் 10 மணி காட்சிகள் முதல் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ஓடிக்கொண்டிருப்பது நாமறிந்ததே.