கமலை சந்தித்து பிரச்சனையில் சிக்கிய இயக்குனர் ஆதிக்





சமீபத்தில் இளைஞர்களை குறி வைத்து வெளிவந்த படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா.இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சகர்கள் மற்றும் குடும்பங்களிடைய பலத்த கண்டனத்தை அள்ளியது. இந்நிலையில் நேற்று ஒரு ரசிகராக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் கமல்ஹாசனை அவருடைய அப்பாவுடன் சந்தித்து ஆசி பெற்றார்.ஒரு பிரபல நாளிதழ் இந்த சந்திப்பை வைத்து அடுத்த கமல் ஹாசனை வைத்து ஆதிக் இயக்கப் போகிறார் என்ற செய்தியை தட்டி விட்டது. இதைக் கேள்விப்பட்ட ஆதிக் உடனே எல்லா பத்திரிகையாளர்களுக்கும் ஒரு குறுந்தகவல் அனுப்பினார், இதோ அவர் அனுப்பிய குறுந்தகவல்.த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் உலகநாயகன் பத்மபூஷன் டாக்டர். கமல்ஹாசன் அவர்களின் ஆசி பெற அணுகிய போது பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு எங்களை சந்தித்தார்.அவருடன் மகழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த போது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நினைவானதாகவே உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்த போது பெருந்தன்மையுடன் பரிசீலிப்பதாக கூறினார். இந்நிலையில் இன்று ஒரு நாளிதழில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன.இது முற்றிலும் தவறான செய்தியாகும். சினிமா வாழ்வில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சி தருகிறது. நானும் என் தந்தையும் என்றென்றும் உலகநாயகனின் உண்மையான மற்றும் நேர்மையான ரசிகர்கள். இந்த செய்தி பிரசுரத்தமையால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியிருந்தார்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad