ரெய்னாவை சிறந்த வீரர் என்று கூற முடியாது: யுவராஜ் சிங்கிற்கு ஆதரவாக பேசும் கவாஸ்கர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் யுவராஜ் சிங்கை தேர்வாளர்கள் புறக்கணித்தது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் தலைவர் கவாஸ்கர் கூறியுள்ளார். 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். ஆனால் மோசமான பார்ம் காரணமாக அவர் சில மாதங்களாக இந்திய அணியில் இருந்து ஒகோப்பை துக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சிக் போட்டியில் 187 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தார். மேலும், இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்தால் தனது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன் என்றும் யுவராஜ் கூறியிருந்தார். இருப்பினும் மீதமுள்ள 2 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அவரை தேர்வாளர்கள் புறக்கணித்தனர். இந்நிலையில் யுவராஜை தேர்வு செய்யாதது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், இருப்பினும் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை எனவும் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும், இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் என்ற கலவை தான் சிறந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட பார்வை. 5வது இடத்தில் யுவராஜ்க்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். யுவராஜ் மிகப்பெரிய மாறுபாடு கொண்டவர். அதே சமயம் 10 வருடமாக விளையாடும் சுரேஷ் ரெய்னாவை நீங்கள் சரியான நபர் என்று கூறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.