சரத்குமார் விளக்கத்தை பண்டவர் அணி ஏற்கவில்லை
சரத்குமார் நேற்று சத்யம் சினிமாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆதரத்தை காட்டினார். இதற்கு நாசர், விஷாலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதில் ’கட்டட ஒப்பந்தம் ரத்து செய்தது தொடர்பாக எங்களுக்கு இதுவரை எதுவும் தெரியாது. ஒப்பந்தம் போட்டபோது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுத்ததாக சரத்குமார் தெரிவித்திருந்தார். ஆனால், தேர்தலுக்கு முன்பே புதிய கட்டடத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். இது எங்களுக்கே புதிய தகவலாக இருக்கின்றது.ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்காதது ஏன் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். ரத்து செய்யப்பட்ட ஆவணத்தை ஆராய்ந்த பிறகே முடிவு எடுப்போம்’ என கூறியுள்ளனர்.