பாண்டவர்அணி கிடையாது என்று விஷால் எதனால் சொன்னார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
நடிகர்சங்கத்தேர்தலில் பாண்டவர்அணி என்கிற பெயரில் போட்டியிட்ட நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. அதன்பின்னர் நடந்த முதல் செயற்குழு அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இனி, பாண்டவர்அணி கிடையாது எல்லாம் ஒரேஅணி என்று விஷால் பேசினார்.தேர்தலில் வெற்றி பெற்றபின்பு இப்படி ஒரு நிலையை எடுப்பதுதான் முறை என்பதால் அவர் இப்படிச் சொன்னார். அதற்குப் பின்னால் இன்னொரு கதையும் இருக்கிறதாம். அந்தக்கதை? திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்துக்கு சுமார் பதினைந்து ஆண்டுகளாகத் தேர்தலே நடக்காமல் இருக்கிறது. அந்தச் சங்கத்துக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம். இப்போது இருக்கும் பொறுப்பாளர்களை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ஓரணி தயாராகிக்கொண்டிருக்கிறதாம். அந்தஅணியை எதிர்க்க இன்னொரு அணியும் உருவாகிறதாம். ரகுநாதரெட்டியை முன்னிலைப்படுத்தும் அந்தஅணியினர் தங்களுக்கு பாண்டவர்அணி என்று பெயர் வைத்துக்கொண்டார்களாம். இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட விஷால், அந்தப்பெயரை யாரும் பயன்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு இனிமேல் நாங்களும் அந்தப்பெயரைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் சொல்லிவிட்டுத்தான் இந்த அறிவிப்பைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.