கோஹ்லிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோஹ்லிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். கிரிக்கெட் போட்டி நடக்கும் போது கூட அனுஷ்கா, விராட் கோஹ்லியின் ஆட்டத்தை பார்க்க கிளம்பி விடுவார். அதே சமயம் கோஹ்லி சொதப்பும் போது அதற்கு அனுஷ்கா தான் காரணம் என்றும் விமர்சனங்கள் எழும். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது காதலை வளர்த்து வந்தார் கோஹ்லி. இந்நிலையில் இவர்கள் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அனுஷ்கா சர்மா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இந்த நேரத்தில் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த விரும்பும் கோஹ்லி திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார். கோஹ்லியின் இந்த முடிவால் அவரது காதலி அனுஷ்கா கோபத்தில் இருக்கிறாராம். மேலும், வருகிற 29ம் தேதி நடைபெற இருக்கும் சக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் திருமணத்துக்கு வரமாட்டேன் என்றும் அதிரடியாக தெரிவித்துவிட்டாராம். இதனால் தனது காதலியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் கோஹ்லி.