பதவியேற்றபின் விஷால் எடுத்த அதிரடி முடிவு
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி அனைத்து முக்கிய பதவிகளையும் வென்றது. இந்நிலையில் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால், பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நடிகர் சங்கத்தின் முதல் முடிவாக மூத்த நடிகை சச்சுவுக்கு வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படுகிறது. மூத்த நாடக-நடிகர்கள், கலைஞர்கள் பிரச்னைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும். நலிந்த நாடக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எங்களின் முதல் குறிக்கோள்.அவர்களை பொருளாதார ரீதியாக உயர்வடைய செய்வோம். அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். தேர்தலின்போது பல்வேறு வாக்கு உறுதிகள் அளித்தோம். அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக உழைப்போம்’ என கூறியுள்ளார்.