டபுள் மகிழ்ச்சியில் வேதாளம் படக்குழு
அஜித் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகவிருக்கும் படம் வேதாளம். இன்னும் பத்துநாட்களே இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இப்படம் சென்சார் பார்வைக்கு இன்று சென்றது. சென்சாரில் எந்த வித காட்சி நீக்கமும் இன்றி யூ சான்றிதழ் பெற்றுள்ளது. முன்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படமும் எந்த வித காட்சி நீக்கமும் இன்றி யூ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவும் யூ சான்றிதழ் பெற்றிருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் படக்குழுவினர் இருக்கிறார்களாம். வேதாளம் சென்சார் சென்று வந்ததும் பட டிரெய்லரை வெளியிட படக்குழு முடிவெடுத்திருந்ததாம். இன்னும் சில தினங்களில் வேதாளம் படத்தின் டிரெய்லரை எடிட்டர் ரூபர் ரெடி செய்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படம் யூ சான்றிதழும் வாங்கிவிட்டதால் நவம்பர் 10ம் தேதி படம் வெளியாவது உறுதியாகிவிட்டது. மேலும் படத்தின் நீளம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் நீளம் கொண்டுள்ளதால். படத்தின் நீளமும் சரியாக அமைந்துள்ளதால். படம் வெளியாகி பின்னர் நீளம் கருதி காட்சிகள் வெட்டப்படும் நிலையும் வர வாய்ப்புகள் இல்லை.