ஆரம்பத்திலே அதிரடி காட்டலாமா? தடுமாறும் ரெய்னாவிற்கு அட்வைஸ்
தென் ஆப்பிரிக்க தொடரில் பார்ம் இல்லாமல் சொதப்பி வரும் ரெய்னாவிற்கு இந்திய அணித்தலைவர் தோனி ஆலோசனை வழங்கியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிரடி பேட்ஸ்மன் வீரரான ரெய்னா பார்ம் இல்லாமல் தவித்து வருவதால் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. அவர் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் சொபிக்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் எடுத்தார். மற்ற இரண்டிலும் டக்- அவுட் ஆனார். இந்நிலையில் இந்திய அணித்தலைவர் தோனி, ரெய்னாவிற்கு சில யோசனைகளை வழங்கியுள்ளார். இது பற்றி தோனி கூறுகையில், “களம் இறங்கியதும் அதிரடியாக விளையாடக்கூடாது, சில பந்துகளை சந்தித்த பின்னரே பெரிய ஷாட்டுகளை ஆடவேண்டும். எதிரணியின் கடினமான பந்து வீச்சை கண்டுபிடித்து அதன் பின் பெரிய அளவிலான ஷாட்டுகளை ஆட வேண்டும். இதற்காக அவர் முதலில் சிறிது நேரம் ஆடுகளத்தில் தாக்குப்பிடித்து நிற்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்.