வித்தியாசமான திருமண அழைப்பிதழ்: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஹர்பஜன் சிங்







இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்யவுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் தோழியான கீதா பாஸ்ராவை மணக்கிறார், இவர்களது திருமணம் வருகிற 30ம் தேதி நடக்கிறது.  ஐந்து நாட்கள் கொண்டாட்டத்துடன் நடைபெறவுள்ள இவர்களது திருமணத்தில், பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.  இவர்களது திருமண அழைப்பிதழ் மிக வித்தியாசமான முறையில் தயாராகியுள்ளது, சிவப்பு நிற பெட்டியின் மையத்தில் தங்க நிறத்தில் உலோகத் தகடு பதிக்கப்பட்டுள்ளது.  அதில் மணமக்கள் பெயரின் முதல் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதுடன், பெட்டியை திறந்து பார்த்தால் உள்ளே ஓம் என்ற எழுத்துடன் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad