பேட்டை பறக்க விட்ட தோனி .. தலைவராக புதிய மைல்கல்லை எட்டினார்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் 2-1 என்று முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி 47 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் தலைவராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங்கை (6295 ரன்கள் , 218 போட்டி) முந்தி 2வது இடம் பிடித்தார். டோனி, இதுவரை 184 போட்டிகளில் தலைவராக செயல்பட்டு 6313 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியா முன்னாள் தலைவர் பாண்டிங் (8497 ரன்கள் , 230 போட்டி) உள்ளார்.