அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்
அஜித் தன் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். நான் இந்த உயரத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய ரசிகர்கள் மட்டும் தான் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் இவர் மன்றங்களை கலைத்தாலும், ரசிகர்கள் இன்றும் இவரை மனதில் வைத்து கொண்டாடி தான் வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் இவர் படம் பற்றி எந்த செய்தி வந்தாலும் ட்ரண்ட் செய்து விடுவார்கள்.அதேபோல் நேற்று ‘ஆலுமா டோலுமா’ மேக்கிங் காட்சிகள் வரும் என கூறப்பட்டது, படத்தின் காட்சிகள் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில், அனிருத் பாடுவது போன்ற வீடியோ தான் வெளிவந்தது, இவை அஜித் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.