அஜித் பற்றி தவறாக பேசினாரா உதயநிதி ?
நடிகர்களின் இன்றைய பெரிய பிரச்சனையே சமூக வலைத்தளங்கள் தான். எந்த ஒரு கருத்தும் சுதந்திரமாக கூற முடியாது போல.அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி, நடிகர் அஜித்தை தவறாக கூறியதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. இதை பல இணையத்தளங்களில் செய்திக்காகவே வெளியிட்டுள்ளனர்.இதைக்கண்ட உதயநிதி ‘நான் அஜித்தை பற்றித் தவறாக எதுவும் சொல்லவில்லை, எனக்கு அவர் மீது மிகுந்த மதிப்பு உண்டு என்று சொன்னதோடு, தவறான செய்திகளை பரப்பவேண்டாம்’ என இணையதளங்களையும் கேட்டுள்ளார்.