வாக்களிக்க அஜித் வராதது குறித்து முதன் முதலாக பேசிய நாசர்
நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நாசர் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் வேகம், மூத்த நடிகர்களின் விவேகம் என பாண்டவர் அணி புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு முதன் முதலாக பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த நாசரிடம் அஜித், நயன்தாரா ஆகியோர் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேட்டுள்ளனர்.இதற்கு விளக்கம் அளித்த் நாசர் ‘யாரும் வாக்களிக்க வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, சந்தானம் கூட அன்று படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை, இதேபோல் அவர்களுக்கு ஏதாவது வர முடியாத சூழல் இருந்திருக்கும்’ என கூறியுள்ளார்.