தீபாவளி: பட்டாசு வெடிக்கும் போது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. பட்டாசுகளை மிகவும் கவனமாக பாதுகாப்புடன் வெடிப்பது மிக அவசியம். பட்டாசுகள் வெடிக்கும் போது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே.
கம்பி மத்தாப்புகளை பொருத்தும் போது, அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். எரிந்து முடிந்ததும் கம்பிகளை வாலியில் போட்டு விடுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு தீக்காயத்தை ஏற்படுத்தக் கூடும். அருகில் குழந்தைகள் இருந்தால், அதனை தொட்டு எடுக்க வாய்ப்பும் இருக்கிறது. வெடிக்காத பட்டாசுகளை தயவு செய்து கையில் எடுத்து பார்க்க வேண்டாம். தண்ணீர் ஊற்றி அணைத்து விடுங்கள்.
சங்கு சக்கரங்களை சிமெண்ட் தரையில் மட்டும் வைத்து பொருத்துங்கள் மண் தரையில் வேண்டாம்.
பட்டாசு திரிகளை தீக்குச்சி வைத்து கொளுத்த வேண்டாம். பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பத்தி குச்சிகளை பயன்படுத்தவும்
பாம்பு மாத்திரைகளை வீட்டுக்குள் வைத்து கொளுத்த வேண்டாம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்தக் கூடும்.
வீட்டருகே மருத்துவமனை இருந்தால் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்பது நல்லது.
பட்டாசுகளை தூக்கி எறியவோ காலால் எட்டி உதைக்கவோ வேண்டாம்.
ராக்கெட்டுகளை பற்ற வைக்க, பைப்புகளை மட்டும் பயன்படுத்தவும்
டின்களிலோ, பாட்டில்களிலோ வைத்து பட்டாசுகளை வெடிக்காதீர்கள். அவைகள் வெடித்து சிதறி உங்களை பதம் பார்த்து விட வாய்ப்புள்ளது.
முடிந்தவரை குடிசைகள் இல்லாத பகுதிகளில் பட்டாசுகளை கொளுத்தவும்.
குழந்தைகளை பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்கள் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
பட்டாசுகளை கொளுத்தும் போது இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
எதிர்பாராதவிதமா உங்கள் மீது தீ பிடித்தால், தரையில் படுத்து உருளவும். தீப்புண் மீது தண்ணீர் ஊற்றி விட்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும்..!