ரஹானேவால் சண்டையிட்டுக் கொண்ட டோனி, கோஹ்லி! அம்பலமானது தோல்விக்கான காரணம்
இந்திய அணித்தேர்வில் ஏற்பட்ட குழப்பமே முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோற்றது. அப்போது இந்திய அணி தேர்வின் மீது விமர்சனங்கள் எழுந்தது. மேலும், சிறந்த வீரரான ரஹானேவின் நீக்கம் தொடர்பாகவும் கேள்வி எழுந்தது. இது பற்றி முன்னாள் அணித்தலைவர் அசாரூதினும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியிலும் ஆடும் லெவனில் ரஹானே களமிறங்குவது கடினம் என்று டோனி கூறியிருந்தார். ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் ராயுடு, அக்சருக்கு பதிலாக ரஹானே, பின்னி இடம் பெற்றிருந்தனர். இதற்கு காரணம், முன்னதாக அணி ஆலோசனையில் ஈடுபட்ட போது, அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி, இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரஹானேவை அணியில் சேர்த்துக் கொள்ள டோனிக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், ரவி சாஸ்திரியின் உத்தரவால் ஆடும் லெவனில் அவரை சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக கோஹ்லி 4வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று டோனி கூறியிருக்கிறார். ஆனால் டோனியின் முடிவுக்கு கோஹ்லி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனாலே 4வது இடத்தில் களமிறங்கிய கோஹ்லியால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக மாறிவிட்டது. மேலும், கோஹ்லி ஆட்டமிழந்து வரும் போது ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தது அவருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. அதே சமயம் 3வது இடத்தில் ஆடிய ரஹானே ரன்கள் எடுத்தார். அவருக்கு டோனி பாராட்டும் தெரிவித்திருந்தார். ஒரு வீரராக பேட்டிங்கில் தடுமாறும் டோனி, அணித்தேர்வில் தலைவராகவும் தனது அதிகாரத்தை இழந்து வருவதையே இது காட்டுகிறது.