சினிமா என்பது கலையா (அ) வியாபாரமா?
ஒருமுறை இயக்குனர் மகேந்திரன் அவர்களிடம் விடுதலைப்புலிகலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள் தமிழ் சினிமாவைப் பற்றி இப்படி கூறினாராம். “ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களை கற்பழித்தது.அப்படி கேவலப்படுத்தியதை விட தமிழ் சினிமா பெண்களை மேலும் மோசமாக இழிவுபடுத்துகிறது” என்றார்.அவர் அப்படி கூற காரணம், இங்கு சினிமா ஒரு ரசிகனுக்கு எவ்வாறு முன்னிறுத்தப்படுகிறது? வியாபாரம் செய்யும் பொருளாகாவா (அ) ரசிக்கப்படும் ஒரு கலையாகவா? வியாபாரம் செய்யும் ஒரு பொருளாக மட்டுமே இங்கு சினிமா பார்க்கப்படுகிறது.வியாபார சினிமாவுக்கான எந்த ஒழுங்கீனமாவது பின்பற்றப்படுகிறதா? இல்லை. இங்கு வெளியாகும் முக்கால்வாசி தமிழ் சினிமாக்கள் ரசிகனின் அறிவை சிறுமையை முன்னிறுத்தப்படுகிறது.“இனம், மதம், மொழ், நீ, நான், கடந்து மானுட உணர்ச்சிகளை பேசுவதே சிறந்த படைப்பு” என்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு என்ன செய்கிறோம் பெண்களை கொச்சையாக சித்தரிப்பது, குழந்தைகளை வன்சொற்களை பேச வைப்பது இல்லையென்றால் அவர்களின் குழந்தைத்தன்மையை மிகைப்படுத்தி காட்டுவது, இது போன்ற சிறுமையான விஷயங்களை முன்னிறுத்தியே படைப்புகள் இங்கு அதிகமாக வெளிவருகின்றன.“போரில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவது தர்மம் ஆகாது. ஆனால் இங்கு நடக்கும் சினிமா என்னும் வியாபரப் போரில் அவர்களை கொச்சைப்படுத்துவது தர்மமா?? அப்படி செய்வது அவர்களை கொலை செய்வதற்கு நிகரானதல்லவா?”கீழ்தரமான விஷயங்களை முன்னிறுத்திய படைப்புகளை வியாபார சினிமா என்று கூறுவது தர்மமா!இன்று பல இளைஞர்களின் “கனவு தொழிற்சாலையாக” உள்ள தமிழ் சினிமா என்று கலையாக மாறும். அவர்களை சிகப்பு கம்பளமிட்டு வரவேற்கும் காலம் வருமா? கருவிகள் மாறும் கலை மாறாது என்பார்கள். ஆனால் இங்கு சினிமா கலையாகவே மாறவில்லையே!!