சட்டம் படிச்சுருக்கீங்களா??அப்போ இத படிங்க..!

சட்டம் படிச்சவங்க என்னலாம் செய்யலாம்






சட்டம் படித்தவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்?
பொதுவாக, புரபஷனல் படிப்பை மேற்கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள், படிப்பை முடித்தப் பிறகு, தங்களின் படிப்பு தொடர்பான பணிகளையே மேற்கொள்வதை நாம் காணலாம். ஆனால் இன்று, தங்களுடைய படிப்பிற்கு நேரடியாக தொடர்பில்லாத தொழில்களிலும், புரபஷனல் படிப்பை முடித்தவர்கள் ஈடுபட்டிருப்பதை பரவலாக காண முடிகிறது.
அத்தகைய பட்டதாரிகளுக்கு சிறந்த உதாரணம் சட்டப் பட்டதாரிகள். சட்டம் படித்தவர்கள், நேரடியான நீதிமன்ற பணிகளுக்கு மட்டும் செல்வதில்லை. அரசியல், அக்கவுன்டிங், ஆசிரியர் பணி மற்றும் நிதித்துறை என்று பல்வேறான துறைகளில் அவர்கள் கோலோச்சுகிறார்கள். (சட்டம் படித்தவர்கள், அரசியலில் கோலோச்சுவது நீண்டகால மரபாகவே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது).
ஒரு சட்டப் பட்டதாரி என்ன செய்யலாம்?
சட்டப் படிப்பை முடித்தவுடன், சில விஷயங்கள் கருத்தில் கொள்ளத்தக்கவை. பலபேர், நேரடி சட்டத்துறையிலேயே ஈடுபடும் பொருட்டு, இன்டர்ன்ஷிப் அல்லது clerkship மேற்கொள்கிறார்கள். ஒரு சீனியர் வழக்கறிஞரின் கீழ் அல்லது தனியார் துறையில் இன்டர்ன் முறையில் பணியாற்றுவதன் மூலமாக, பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
மேலும், இதன்மூலம், அத்துறை சார்ந்த வாழ்க்கைத் தொடர்பான ஒரு மேலோட்டமான பார்வையும் கிடைக்கிறது. இன்டர்ன் மேற்கொள்வதன் மூலம், அதிகம் மெனக்கெடாமலேயே நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது.
சட்டத்துறையில் இளநிலைப் படிப்பை முடித்த சிலர், இன்டர்ன் மேற்கொள்ள முடிவெடுக்கும் அதேவேளையில், வேறுசிலர், அத்துறையிலேயே முதுநிலை மற்றும் பிஎச்.டி. போன்ற மேற்படிப்புகளை மேற்கொள்ள விளைகின்றனர்.
சட்டப் படிப்பில் இளநிலைப் படிப்பை முடித்தவர்கள், விரும்பினால், நேரடியாகவே தொழிலில் இறங்கலாம். உங்களுக்காக பணிசெய்தல், அரசுக்காக செய்தல், தனியார் நிறுவனத்துக்காக, வணிகத்திற்காக மற்றும் கல்வி நிறுவனத்திற்காக போன்றவை அவற்றுள் அடக்கம்.
மறைமுக துறைகளில் சிலருக்கு ஆர்வம் ஏன்?
கஷ்டப்பட்டு படித்து, ஒரு சட்டப்படிப்பை முடித்து, பட்டம் பெற்ற பிறகு, அத்துறையில் நேரடியாக ஈடுபடாமல், சிலர், வேறுசில துறைகளுக்கு ஏன் தாவுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. சிலரின் எண்ண ஓட்டம், மற்றவர்களிடமிருந்து வேறுபடுவதுதான் அதற்கு காரணம். அவர்கள், வித்தியாசமாக எதையேனும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், ஏராளமான சட்டப் பட்டதாரிகள் படித்து முடித்து வெளிவருவதால், அவர்களோடு இணைந்து நின்று, எதற்காக போட்டி போட்டுக்கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.
எனவே, தங்களின் சட்டப் படிப்பின் மூலம், ஏதேனும் வித்தியாசமாக, அது சற்று சவாலானதாக இருந்தாலும் கூட, அதை ஆர்வத்துடன் செய்ய முயல்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், சட்டப் படிப்பின் மூலம், நேரடி சட்டத்துறைக்கு வெளியில், நிறைய சாதிக்கலாம். ஆனால், இது பலருக்கும் தெரிவதில்லை.
அவை என்னென்ன?
வணிகம் மற்றும் சட்டம் சார்ந்த துறைகள்
மேற்கண்ட துறைகள், பெரும்பாலான சட்ட மாணவர்களுக்கு பரிச்சயமானவை. இத்துறைகளில் ஈடுபட, தேவையான அளவிற்கு சட்டம் தெரிந்திருந்தால் போதுமானது. புராஜெக்ட் மேனேஜர் அல்லது மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் போன்ற பல பணி நிலைகள் உள்ளன.
இவைதவிர, வேறுபல மறைமுக(paralegal) துறைகளும் உள்ளன. அவை,
* பொதுத்துறை மற்றும் அரசியல் சார்ந்த பணிகள்
* வங்கியியல், நிதித்துறை மற்றும் அக்கவுன்டிங்
* கற்பித்தல் மற்றும் கல்வித்துறை
* விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் பொதுமக்கள் தொடர்பு துறைகள்
* மீடியா
* என்.ஜி.ஓ., அறக்கட்டளை, மனிதவள மேம்பாட்டுத்துறைகள்
* மருத்துவம் சார்ந்த துறைகள்
மேற்கண்ட துறைகளிலெல்லாம், சட்டம் படித்த பட்டதாரிகள், சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெற்று, நல்ல சம்பளமும் பெற்று வாழ்க்கையில் சாதிக்கும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad