விஜய், அஜித்! ஸ்ருதி ஹாசனுக்கு யாரை அதிகம் பிடிக்கும்?
விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி ஹீரோக்களோடு நடித்துவிட்டார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்பது பற்றி தெரிவித்துள்ளார்."விஜய் சார் ரொம்ப அமைதி... பொறுமை. ஆனா, அதெல்லாம் ஃப்ரெண்ட்லியா பழகும்போதுதான். கேமரா முன்னாடி நின்னுட்டா ஒரு ஃப்ளாஷ்ல ஆளே மாறிடுவார். ஒரு சின்ன சிரிப்புல நம்மை ஓவர்டேக் பண்ணிடுவார். ஷாட்ல அவர்கிட்ட கேர்ஃபுல்லா இருக்கணும்.""தமிழ் சினிமாவில் நான் சந்திச்சவங்கள்ல அஜித் சார் எனக்கு ரொம்பப் பிடிச்ச நபர். எல்லாரிடமும் ஒரே மாதிரி தன்மையாக பழகுவார். நம்ம பிரச்னையை நம்மளைவிட நல்லா புரிஞ்சுக்கிட்டு, நம்மளைக் கச்சிதமா வழிநடத்துவார். எதுவா இருந்தாலும் 'ப்ளீஸ் டேக் கேர்’னு அவர்கிட்ட கொடுத்துரலாம்.