விஜய் , அஜித்துக்கு மட்டுமா இந்தப் பிரச்னை?







தமிழைப் பொறுத்தமட்டில் இணைய நாயகர்கள் என்றால் விஜய் அஜித் தான். இவர்கள் இருவரின் ரசிகர்கள் செய்யும் பிரச்னைகளால் சமீபகாலங்களாக சம்மந்தப்பட்ட நடிகர்களின் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனைக் கூட பாதித்து விடுகின்றன.  இந்நிலையில் இதே போல் தெலுங்கிலும் டாப்
நடிகர்களின் சண்டை ஒரு படத்தின் வசூலையே பாதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம் சரண் நடிப்பில் புரூஸ் லீ படம் சமீபத்தில் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. விமர்சன ரீதியில் ஓரளவிற்கு கமர்ஷியல் படமாக நல்ல கருத்துகளைப் பெற்றுள்ளது. எனினும் பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளது.  இதற்குப் பல காரணங்கள் இருப்பினும் முதல் காரணமாக பவன் கல்யாணின் ரசிகர்கள் தான் இதற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதாவது சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாக பாபு புரூஸ் லி நல்ல ஹிட். மெகா ஸ்டார் எண்ட்ரி சீன் உண்மையின் அற்புதமான ஒன்று.   பவன் ரசிகர்கள் கம்மென இருக்கவும், முதலில் அவரது உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு அவர் ஏன் வரவில்லை எனக் கேளுங்கள். அதை விட்டுவிட்டு இங்கே என்ன என  கொஞ்சம் காட்டமாகப் பேச அவ்வளவுதான் சும்மா இருப்பார்களா பவன் ரசிகர்கள். புரூஸ் லீ படத்தை இணையத்தில் சகட்டு மேனிக்கு கிழித்துவிட்டனர். மீம்ஸ், விமர்சனம் என ரசிகர்கள் செய்த இந்த அட்ராசிட்டியால் புரூஸ் லீ நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் சாதரண மக்களுக்கும் கூட ஏற்பட்டுள்ளது.தற்போது படம் வசூலில் கொஞ்சம் தடுமாறத் துவங்கியுள்ளதாம். 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad