வேதாளம் படத்திற்கு யு சர்டிபிகேட்
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள படம் வேதாளம் இப்படத்திற்கு அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வீரம் படத்திற்குப் பிறகு இயக்குனர் சிவா, அஜித் மீண்டும் இணைந்துள்ள படம் வேதாளம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளிவர உள்ள இந்தப் படம் ஒரு ஆக்ஸன் குடும்பப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பாட்ஷா படத்தின் சாயலில் இருக்கும் என நீண்ட நாட்களாகவே ஒரு பேச்சு உலவி வருகிறது.மீண்டும் சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித் நடித்துள்ள இந்தப் படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ள தூங்காவனம் படத்துடன் போட்டி போட உள்ளது.