முப்பதுநாட்களில் தூங்காவனம், அசத்திய கமல் -சாத்தியமானது எப்படி?
தூங்காவனம் படத்தின் பாடல்கள் மற்றும் இரண்டாவதுமுன்னோட்ட வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. அவ்விழாவில் கமல், த்ரிஷா, கிஷோர், சம்பத், மதுஷாலினி உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர்கள், விஷால், தனுஷ்,கருணாஸ் உட்பட நிறையநடிகர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கௌதம், அமீர், பாண்டிராஜ் உட்பட பல இயக்குநர்களும் கலந்துகொண்டார்கள்.
விழாவில் கமல் பேசும்போது, இந்தப்படத்தை நாற்பது நாட்களில் எடுத்தார்கள், ஐம்பதுநாட்களில் எடுத்தார்கள் என்று ஆளாளுக்கு ஒரு நம்பர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தை இரண்டுமொழிகளில் எடுத்திருக்கிறோம். பெரும்பாலான காட்சிகள் இரண்டுமுறை எடுக்கப்பட்டன.கார்வருகிற காட்சிதானே ஒருமுறை எடுத்தால்போதும் என்று விடமுடியாது, நம்பர்பிளேட் மாற்றி இன்னொருமுறை எடுக்கவேண்டும், தமிழ்நாட்டுபோலிஸ் வேறு தெலுங்கானா போலிஸ் வேறு அதனால் போலிஸ் வருகிற காட்சிகளையும் இரண்டுமுறை எடுக்கவேண்டும்.
அதனால் இரண்டுபடங்கள் எடுத்த கணக்காகிவிட்டது. இதை 52 நாட்களில் முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டோம், படத்தை முடித்துப் போட்டுப்பார்த்த பிறகு சில திருத்தங்கள் செய்ததால் மேலும் எட்டுநாட்கள் எடுக்கவேண்டி வந்தது. ஆக மொத்தம் அறுபதுநாட்களில் இந்தப்படங்கள் முடிந்துவிட்டன. இரண்டுபடங்கள் அறுபதுநாட்களில் என்றால் ஒரு படத்தை முப்பதுநாட்களில் முடித்திருக்கிறோம்.
இது சாத்தியமேயில்லை என்று பலர் சொன்னார்கள். நானே 200 நாட்கள் படமெடுத்திருக்கிறேன். சரியாகத் திட்டமிட்டால் அவ்வளவுநாட்கள் தேவையில்லை என்று நான் சோன்னபோது, இந்தக்காலத்தில் அப்படி முடியாது என்று சொன்னார்கள். ஆனால் நாங்கள் சாதித்துக்காட்டியிருக்கிறோம். அதற்கு எங்களுக்குச் சரியான டீம் அமைந்ததுதான் காரணம்.
முன்னிலையில் இருக்கும் 12 பேரை மட்டும் வைத்து ஒருபடத்தை எடுத்துவிடமுடியாது. டிபன் கொடுக்கிறவர் சமைக்கிறவர், கார்டிரைவர் உட்பட யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள்வேலைகளைச் சரியாகச் செய்தால்தான் இது நடக்கும். எனக்கு அப்படி ஒரு பிரமாதமான டீம் அமைந்துவிட்டது. அந்த டீமின் வெற்றிதான் இந்தப்படம்.
இந்தப்படத்தில் முன்னணிநடிகர்கள் பலர் நடித்திருந்தபோதும் எல்லோரும் ரிகர்சலில் கலந்துகொண்டார்கள். அவர்கள் தாமாகவே முன்வந்து அப்படிச்செய்ததும் படத்தைச் சீக்கிரமாக முடிக்க ஒரு காரணம். எனவே இவர்கள் நடிக்கும் எல்லாப்படங்களிலும் இப்படியே செய்யக்கடவது என்று சொல்லிக்கொள்கிறேன் என்றார்.