புலி படத்தால் சிக்கலில் மாட்டிய விஜய்
இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் பிரமாண்டமாக வெளிவந்தது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெற வில்லை.இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் இப்படம் முதல் வாரத்தில் ரூ 71 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் விநியோகஸ்தர் ஒருவர் ‘புலி படம் முதல் இரண்டு நாட்கள் நல்ல வசூல் வந்தது உண்மை தான், ஆனால், அதன் பிறகு வசூல் மிகவும் வீழ்ச்சியடைந்தது, இதனால், எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதுக்குறித்து விரைவில் விஜய்யை சந்தித்து பேசுவோம்’ என கூறியுள்ளார். இதேபோல கடந்த வருடம் லிங்கா கடும் பிரச்சனையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.