தொழில்நுட்பமுன்னோடி என்று நிருபித்த கமல்
கமல் நடித்த தூங்காவனம் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இசை வெளியீட்டுவிழா என்றால் சிடிபோன்ற ஒரு பெரியஅட்டையை உருவாக்கி அதில் ரிப்பன்கட்டி அதை அவிழ்ப்பார்கள்.இன்று அதுபோன்று செய்ய படக்குழுவினர் தயாரானபோது அதை வேண்டாமென மறுத்துவிட்டார் கமல். அதோடு, பாடல் இந்நேரம் ஐடியூனில் வந்துவிட்டது என்றும் சொன்னார்.
இந்தநிகழ்ச்சி சென்னையில் நடந்த அதேநேரம் தமிழகம் முழுவதும் இருபத்தைந்து திரையரங்குகளில் அந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. இதனால் ஒரேநேரத்தில் இருபத்தைந்தாயிரம்பேர் இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கின்றனர் என்றார் கமல்.
அதோடு இணையதளத்திலும் இந்நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. அதை இலட்சக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்றார் கமல். அதுமட்டுமில்லாமல் திரையரங்கின் உள்ளேயே ஹெலிகேம் என்றழைக்கப்படும் ஹெலிகாப்டர் கேமராக்களும் பறந்தவண்ணம் இருந்தது வந்திருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
புதியதொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி என்பதை இதன்மூலமும் நிருபித்திருக்கிறார் கமல்.