செய்த தவறுக்கு மன்னிப்புக்கேட்ட எஸ்.வி.சேகர்
நடிகர்சங்கத்தேர்தல் முடிந்தபின்பும் அது தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. இந்தத்தேர்தலில் நாசர் அணி பக்கம் இருந்த எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஆதரவாக மிகத்தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
தேர்தல் முடிந்தபின்பு சரத் அணி தோல்வியடைந்ததும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் நாசரும் விஷாலும் சிரித்துக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு புகைப்படத்தையும் பக்கத்திலேயே சரத்தும் விஜயகுமாரும் அழுதுகொண்டிருக்கிற ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
அவர்கள் அழுகின்ற அந்தப்புகைப்படம், விஜயகுமாரின் மனைவி மஞ்சுனா மறைவின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாம். அதனால் மரணவீட்டில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்தது தவறு என்று சொல்லி எஸ்.வி.சேகரைப் பல தரப்பட்டவர்களும் சமுகவலைதளங்களில் வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
எனவே, நேற்றுஇரவு சரத்அவர்களும் விஜயகுமார் அவர்களும் அழும் புகைப்படம் எந்தத்தருணத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியாமல் பதிவிட்டுவிட்டேன், தெரிந்தவுடன் நீக்கிவிட்டேன் என் தவறுக்கு வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.