விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த சரத்குமார்
நடிகர் சங்க தேர்தல் வருகிற இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. நடிகர் சங்க தேர்தலுக்காக விஷால் அணி நாமக்கல் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சரத்குமார் விஷால் மீது கிரிமினல் வழக்கை தொடர்ந்துள்ளார். கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பே நடிகர் விஷாலுக்கு சரத்குமார் இதுகுறித்து ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். என்னை பற்றி தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார், இது பற்றி கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பே பதில் அனுப்பிருந்தோம் ஆனால் எந்தவித பதிலும் அனுப்பவில்லை என்கிறார்கள். இதனால் அவர் மீது இன்று எழும்பூர் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இதுபற்றி விஷாலிடம் கேட்ட போது, இனிமே எதுவாக இருந்தாலும் நீதியின் வழியில் செயல்பட போகிறோம். அவர்கள் அனுப்பிய நோட்டீஸ்க்கு பதிலும் அனுப்பியுள்ளோம் என்றார்.