விக்னேஷ்சிவன் மீது கடுப்பில் இருக்கும் தனுஷ்
தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் ரௌடிதான் படத்தின் ரிசல்ட்டைக் கேள்விப்பட்ட உடனே விஜய் சேதுபதியை அழைத்து தன் பேனரில் அடுத்தப் படத்திலும் நடிக்க அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் தனுஷ். ஆனால் நானும் ரௌடிதான் படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுக்கு ஒரு போன் கூட செய்யவில்லை தனுஷ்.அது மட்டுமல்ல ட்விட்டரிலும், விக்னேஷ்சிவன் பெயரை பிளாக் செய்துவிட்டாராம் தனுஷ். விக்னேஷ் சிவன் மீது தனுஷுக்கு ஏன் இத்தனை கடுப்பு? நானும் ரௌடிதான் படத்தின் கதையை தனுஷிடம் சொன்னபோது இத்தனை கோடியில் படம் எடுப்பதாக சொல்லியிருக்கிறார், ஆனால் சொன்னதை விட படத்தின் செலவு அதிகமாகிவிட்டது. அதுபோக படத்திற்கும் யு கிடைக்கவில்லை என்பதால் வரிவிலக்கும் கிடைக்கவில்லை. இதனால் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் தனுஷ்க்கு பெரிய லாபம் ஒன்றும் இல்லையாம், இதனால் தான் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் தனுஷ் என்று கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.