புலி நாயகி படைத்த புதிய சாதனை!
கமல்ஹாசனின் மகளாக அறியப்பட்டு பல பாடல்களில் பாடகியாக உதயமாகி மூனு படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக தோன்றி, தற்பொழுது டாப் ஹீரோக்களுடன் நடித்துவருபவர் ஸ்ருதிஹாசன். தற்பொழுது விஜய்யுடன் புலி படத்திலும், அஜித்துடன் வேதாளம் படத்திலும் ஹீரோயினாக நடித்துவருகிறார். இரண்டுமே அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. இதற்கு நடுவே ட்விட்டரில் 3 மில்லியன் ரசிகர்கள் இவரைப் பின் தொடர்கின்றனர்.
ட்விட்டரில் 3மில்லியன் ஃபாலோவர்ஸை எட்டியவுடன், ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
இதுவரை ரஜினி, தனுஷ், சித்தார்த் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்களை மில்லியனுக்கு மேல் ரசிகர்கள் தொடர்கின்றனர். இவர்களின் வரிசையில் ஸ்ருதியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.