என்ன பதில் இது? பிரபல தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்
யுத்தம் செய், நான் மகான் அல்ல ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தது அனைவரும் அறிந்ததே.இந்த நிகழ்ச்சியை மற்றொரு பிரபல தொலைக்காட்சி ஒன்று கிண்டல் செய்தது. இதை அவர் முதல் முறை என்பதால் மன்னித்து விட்டார். இரண்டாவது முறையும் கிண்டல் செய்தது அவரை கோபப்படுத்தியுள்ளது.இதனால், தன் டுவிட்டர் பக்கத்தில் தன் கண்டனத்தை தெரிவித்தார். இதற்கு அந்த தொலைக்காட்சி நிர்வாகம் ‘அது ஒரு ஃபன் ஷோ. அந்த ஷோ நன்றாக உள்ளதாக ஆரம்பத்தில் லட்சுமியே கூறினார், திடீர் என்று தற்போது ஏன் ஆவேசப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது.இதைக்கேட்டு மேலும் கோபமடைந்த லட்சுமி ‘இதெல்லாம் ஒரு பதிலா, இதுப்போல் ஒரு பொறுப்பற்ற பதிலை பார்த்ததே இல்லை’ என வெளுத்து வாங்கியுள்ளார்.