வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி!
ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஒரு நற்செய்தி. 7.25% ஆக இருந்த வட்டி விகிதத்தை, 6.75% ஆக குறைத்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி [RBI]. இதனால் வங்கிகளில் கடன் பெற்று, அதை திரும்பி செலுத்துவது சற்று சுலபமாகி இருப்பதால், வரப்போகும் பண்டிகை காலத்தில், வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து, சரிந்து கொண்டிருக்கும் வாகன விற்பனையை தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த சில மாதங்களாக, இரு சக்கர மற்றும் இலகு ரக வாகன விற்பனையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இதற்கு நிலையின்றி நிகழும் பருவ மாற்றங்கள் தான் காரணமாக கூறப்படுகிறது. ஆனால், கார்களின் விற்பனை, கடந்த 10 மாதங்களில், விழ்ச்சியின்றி சென்று கொண்டிருக்கிறது. பல பெரிய வங்கிகள் வட்டி குறைப்பை அமல்படுத்திவிட்ட நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் இருப்பவர்களுக்கு, இது நிச்சயம் ஆறுதலான விஷயம் தான். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், பைக்குகளின் விற்பனை 3% சரிந்திருந்தாலும். ஸ்கூட்டர்களின் விற்பனை 15.6% உயர்ந்திருக்கிறது.