விஷாலை நம்பி போக வேண்டாம் என்று சிம்பு ஆவேசமாக பேசினார்
விஷாலுக்கு போட்டியில் நிற்க என்ன தகுதி இருக்கிறது. விஷாலை நம்பிப் போகாதீர்கள் என்று சிம்பு ஆவேசத்துடன் கூறியுள்ளார். மேலும் சிம்பு பேசியதாவது, “ கர்ணாஸ், கார்த்தி, பொண்வண்ணன், நாசர் எல்லோருமே நல்லவங்க தான். எல்லோருமே எதாவது நல்லது நடக்கும் என்று நம்பிதான் விஷால் பின்னாடி செல்கிறார்கள். ஆனால் அதற்கான ஆள் அவன் கிடையாது.நான் ஒன்பது வயதிலிருந்து சினிமாவில் இருக்கிறேன். 16 வயதிலேயே உறுப்பினராகி விட்டேன். நடிகர் சங்க செயற்குழுவிலும் இருந்திருக்கிறேன். அப்போ எல்லாம் யாருமே வரவில்லை. இப்போ தீடீரென்று கேள்வி கேட்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க பிரச்னை குடும்ப விஷயம். இதை ரோட்டுக்கு கொண்டுபோய் எல்லோரும் கேவளமா சிரிக்கிறமாதிரி பண்ணிட்டாங்க. இந்தப் பிரச்னையால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். இது என்னால தாங்க முடியவில்லை. விஷாலிடம் இதைப் பற்றி பேசும் போது சிரிக்கிறாரு.. “இனிமே நீங்க பேசி, எல்லாம் நடந்து” என்று எள்ளி நகையாடுகிறார். என்ன பார்த்து விஷால் சிரித்தது கூட பரவாயில்லை. என் குடும்பத்தை பார்த்து ஊரே சிரிக்கிறமாதிரி செஞ்சிட்டாரு என்பது தான் என்னுடைய கோவமே. நடிகர் சங்கத்தில் போட்டிப் போடும் அளவிற்கு விஷாலுக்கு என்ன தகுதி இருக்கு? யாரும் அவன் பின்னாடிப் போகாதீர்கள்!
ராதாரவி விஷாலை நாய் என்று திட்டியது தவறுதான். ஆனால், நீ செய்தது நரி வேலை. உன்னை எப்படி நாய் என்று சொன்னார்கள். மூத்த நடிகர்களால் உருவாக்கியது தான் இது. திடிரென கேள்வி கேட்பது எப்படி? எனக்கு தேர்தல் வேண்டாம். நடிகர் சங்கத்தை உடைக்கவிட மாட்டேன்
விஷாலுக்கு ஏதோ தனிப்பட்ட நோக்கத்துடன் தான் தேர்தல் வேண்டும் என்று பேசுகிறார். நல்ல நோக்கமெல்லாம் ஏதும் கிடையாது. கருணாஸ், நாசர், கார்த்தி யாரும் அவன் பின்னாடிப் போகாதீர்கள்! எல்லோரும் ஒரே குடும்பமாகவே இருப்போம்” என்று சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.