விஜய் , அஜித் செய்தால் நியாயம், மகேஷ்பாபு, ராம் சரண் செய்தால் அநியாயமா?
சமீபகாலமாக தமிழுக்கு டப்பிங் படங்களின் வரவு அதிகரித்து வருகிறது. முக்கியமாக மகேஷ் பாபு, ராம் சரண் இருவரது படங்களும் தமிழுக்கு டப்பாகி வெளியிடும் வழக்கம் கொஞ்சம் அதிகமாகவே உருவாகியுள்ளது.
இந்நிலையில் மன்சூர்அலிகான் 850 திரையரங்குகளை டப்பிங் படங்களே ஆக்கிரமித்துள்ளன. தமிழ் நாட்டில் தமிழ்ப் படங்களுக்கு தற்போது திரையரங்குகள் கிடைத்த பாடில்லை. இதனால் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக முதல்வர் வேற்று மொழி சார்ந்த டப்பிங் படங்களை, கர்நாடகா பாணியில் தமிழ் நாட்டிலும் தடை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.அவர் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கக்காரணம், அவருடைய அதிரடி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட அதேநாளில் ருத்ரமாதேவி படம் வெளியாகவிருப்பதுதானாம்.
சற்றே சிந்தித்துப் பார்த்தால் நம்மூரின் விஜய், அஜித், சூர்யா, விஷால், மற்றும் இயக்குநர்கள், ஷங்கர், மணிரத்னம் ஆகியோர்,அவரவர் தமிழ்ப் படங்களை மற்ற மாநிலங்களில் டப் செய்து வெளியிடத்தான் செய்கிறார்கள். இப்படி இங்கே மற்ற மொழிப் படங்களுக்கு நாம் தடை விதிப்போம் எனில் நம்முர் படங்களுக்கு மற்ற மாநிலத்தவரும் தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளன. இங்கே அஞ்சான், புலி, பூஜை, ஆம்பள போன்ற படங்கள் தமிழில் விமர்சன ரீதியாக சிக்கல்களில் சிக்கினாலும் மற்ற மாநிலங்களில் இப்படங்கள் நல்ல வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
அப்படி இருக்கும் தருவாயில் சினிமாவில் மொழி வேறுபாடு அவசியமா என்றே தோன்றுகிறது. மேலும் இப்படி பல படங்கள் இங்கே வெளியாவது , அங்கே நம் படங்கள் வெளியாவதும் இருந்தால் தானே இந்திய அளவில் ஒரு படம் பேசப்படும்.இதற்கு எடுத்துக்காட்டாக கன்னடப் படங்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்களின் படங்கள் இங்கே வெளியாவதும் இல்லை. நமது படங்கள் அங்கே செல்வதும் இல்லை என்பதாலேயே மலையாளம் மற்றும், தெலுங்குப் படங்கள் அளவிற்கு கன்னடப் படங்கள் பிரபலமாக பேசப்படுவது இல்லை என்றே கூற வேண்டும்.