வெளிநாட்டு கல்விக்கு பயனுள்ள இணையதளங்கள்!!
வெளிநாட்டு
கல்விக்கு பயனுள்ள இணையதளங்கள்
வெளிநாட்டில் கல்வி பயில
பலருக்கும் ஆர்வம் இருந்தாலும், குறிப்பிட்ட நாட்டின் கல்வி முறை முதல் துறை சார்ந்த சிறந்த கல்வி
நிறுவனத்தை அடையாளம் காணுதல், விண்ணப்பிக்கும் முறை, விசா பெறுவதற்கான விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள்,
கல்வி உதவித்தொகை, செலவினங்கள், வாழ்க்கை முறை உட்பட ஏராளாமான சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதில் பலரும்
‘கோட்டை’ விடுகின்றனர்!
பலர் வெளிநாட்டு கல்வி முகவர்களையும், ஆலோசனை மையங்களையும் அணுகுகின்றனர். ஆனால்,
அங்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மைதானா? என்ற கேள்வியும் உடன் எழுகிறது. அவர்கள் பரிந்துரைக்கும் கல்வி
நிறுவனத்தில் கண்களை மூடிக்கொண்டு சேர்வது சரியாக இருக்குமா?
சில கல்வி நிறுவனங்கள் முறையாக
அங்கீகாரம் பெறாதவையாக இருக்கலாம். வெளிநாட்டில் கல்வி பயில அனைத்து ஏற்பாடுகள்
செய்யப்பட்டு விட்டாலும், கடைசி நேரத்தில்
விசா மறுக்கப்படலாம் அல்லது காலம் தாழ்த்தப்படலாம். அவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்க
முன்பே தெளிவு பெறுவது நல்லது!
எனவே, கல்வி முகவர்கள் கூறும் தகவல்களை மறு ஆய்வு
செய்வது மாணவர்கள் மற்றும் பெற்றோரது கடமை. அப்படியென்றால் உண்மையான தகவல்களை
எப்படி தான் அறிந்துகொள்வது? என்ற கேள்வி எழும்.
அதற்காகத்தான், பிரபலமான நாடுகள் பலவும் வெளிநாட்டு
மாணவர்களின் வசதிக்காகவே முக்கிய தகவல்களை அதிகாரப்பூர்வ கல்வித்துறை அல்லது தூதரக
இணையதளங்கள் வாயிலாக வெளியிடுகின்றன.
குறிப்பாக, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள்,
விசா பெறும் வழிமுறைகள் போன்றவற்றை இதன்மூலம் மாணவர்கள்
அறிந்துகொள்ள முடியும். தேவைப்பட்டால், இங்கே உள்ள
வெளிநாட்டு தூதரகத்தை நேரடியாக அணுகியும் தேவையான விபரங்களை பெறலாம்.
வெளிநாட்டில் கல்வி பயில
விரும்பும் மாணவர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்களைக் இங்கே காண்போம்.