பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வீழ்ந்த புலி- ருத்ரமாதேவி முன்னிலை
இளைய தளபதி விஜய் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகிய படம் புலி. இப்படம் கலவையான விமர்சனங்களை தான் ஆரம்பத்தில் இருந்தே சந்தித்து வந்தது.இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் புலி 3 வாரங்களில் ரூ 5.04 கோடி வசூல் செய்துள்ளது. நயன்தாரா நடித்த மாயா திரைப்படம் 5 வாரத்தில் ரூ 3.23 கோடி வசூல் செய்துள்ளது. மாயா ஏன்றகனவே சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்து விட்டது.ருத்ரமாதேவி 3 நாட்களில் ரூ 81 லட்சம் வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் விஜய் படம் ஒன்று இத்தனை பின்னடைவு ஏற்பட்டது இது தான் முதல் முறை.