புலி படத்தால் உச்சக்கட்ட வருத்தத்தில் இருக்கும் பிரபல நடிகை
புலி படம் ரசிகர்களிடையே இன்று வரை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ஆனால், வசூலில் கடந்த வாரம் வரை எந்த ஒரு பாதிப்பும் இல்லை.தற்போது வார நாட்களில் கொஞ்சம் வசூல் டல் அடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் அப்பா விஜய்க்கு ஜோடி நந்திதா.ஆனால், இவர் இந்த படத்தில் நடித்தார் என்பதற்கு ஆதாராம் இப்படத்தின் விக்கிபீடியாவாக தான் இருக்கும், அந்த அளவிற்கு மிக குறைந்த நிமிடமே வருவார்.இவர் சம்மந்தப்பட்ட காட்சியை படத்தின் நீளம் கருதி வெட்டிவிட்டதாக கூறப்படுகின்றது. இதனால், மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறாராம் நந்திதா.